Home இலங்கை சமூகம் மூடப்படும் நிலைக்கு வந்துள்ள வேலணை வைத்தியசாலை

மூடப்படும் நிலைக்கு வந்துள்ள வேலணை வைத்தியசாலை

0

வேலணை – வங்களாவடி பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவை செயற்பாடுகள் ஆளணிப்
பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு பகுதியளவில் இழுத்து மூடப்படும் நிலைக்கு
வந்துள்ளதாக தெரியவருகின்றது.

தீவகப் பிரதேசத்தின் இரண்டாவது பிரதான வைத்தியசாலையாகவும் தீவகத்தின்
மையப்பகுதியில் அமைந்துள்ளதுமான குறித்த வைத்தியசாலை கடந்த நல்லாட்சிக்
காலத்தில் அன்றைய சுகாதார அமைச்சராக இருந்த ராஜித சேனரத்னவினால் “பி”
தரத்திற்கு அவசர அவசரமாக தரமுயர்த்தப்பட்டது.

ஆனாலும், குறித்த தரத்திக்கு ஏற்ப ஆளணி வளங்களை நிவர்த்திக்கும் எந்தவிதமான
பொறிமுறையையும் குறித்த அமைச்சர் ஏற்படுத்தவில்லை. அதன் பின்னரும்
அமைக்கப்பட்ட அரசாங்கங்களில் இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் உரிய தர்ப்பினரது
பார்வைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அது கண்டு கொள்ளப்படாத நிலையில்
இருந்து வந்தது.

துறைசார் அதிகாரிகள்

இருப்பினும், இருந்த குறைந்தளவான ஆளணி வளங்களை கொண்டு அந்த வைத்தியசாலையின்
தரத்துக்கு ஏற்ப 24 மணி நேரமும் குறைந்த ஆளணியுடன் சேவை முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக இரு வைத்தியர்களே இவ்வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட நிலையில்
அவர்கள் இரவு பகலாக ஓய்வின்றி, தமக்கான விடுப்புகள் இன்றி சேவை செய்யும்
நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தனர்.

இதேபோன்று தாதியர் பற்றாக்குறையும் இவ்வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக இருந்து
வருகின்றது. இதுவும் துறைசார் அதிகாரிகள் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு
செல்லப்பட்ட போதும் அவ்விடயமும் அலட்சியப் போக்காக பார்க்கப்பட்டு
கைவிடப்பட்டது.

ஆனாலும், குறித்த வைத்தியசாலையில் மாதாந்தம் 2500 இற்கும் அதிகமான நோயளர்களும்
வருடாந்தம் 30 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்களும் சிகிச்சை பெற்று வந்ததற்கான
ஆதாரங்களும் வைத்தியசாலையின் ஒட்டப்பட்டுள்ள பதிவேட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

சிகிச்சை தொகுதிகள் 

இதேநேரம், குழந்தை பிரசவ விடுதி உள்ளிட்ட பல சிகிச்சை தொகுதிகளை கொண்டுள்ள இந்த
வைத்தியசாலை நெடுந்தீவு, ஊர்காவற்றுறை ,வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு
மண்டைதீவு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய தீவகத்தின் மையப்ப குதியில்
அமைந்துள்ளதானது நோயாளர்களின் அவசர தேவைகளை நிவர்த்தரி செய்யும் ஒரு
நிலையமாகவும் இருந்து வருகின்றது.

அத்துடன் குறித்த வைத்தியசாலைக்கு அவசர நோயாளர் காவி வாகனங்களும் (அம்புலன்ஸ்)
பற்றாக்குறை அல்லது இல்லாதத நிலையே காணப்படுவதாக தெரியவருகிறது.

இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் முதல் குறித்த வைத்தியசாலையின் மருத்துவ சேவையை
மாலை 6 மணியுடன் நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அது தொடர்பாகன
அறிவுறுத்தலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த செய்தியானது தற்போது புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் புதிய
மாற்றங்கள் வரும் என நம்பி வாக்களித்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், இந்த சேவைக் குறைப்பை இடைநிறுத்தி வைத்தியசாலைக்கான ஆளணி
வழங்களை நிவர்த்தி செய்து தொடர்ந்தும் வேலணை மக்களுக்கு குறிப்பாக தீவக
மக்களுக்கு 24 மணி நேர சேவையை குறித்த வைத்தியசாலை ஊடாக வழங்க அரசாங்கம்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் துறைசார் தரப்பினரிடம் கோரிக்கை
முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version