Home இலங்கை சமூகம் வேலணையில் காணி உரிமையாளர்களை ஆவணங்களுடன் தயாராகுமாறு அறிவுறுத்தல்

வேலணையில் காணி உரிமையாளர்களை ஆவணங்களுடன் தயாராகுமாறு அறிவுறுத்தல்

0

வேலணை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கணி உரிமையாளர்களுக்கு ஆதன வரி
அறவிடல் தொடர்பாக வேலணை பிரதேச சபை விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

செய்திக் குறிப்பு

வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமாரின் கையொப்பத்துடன் இது தொடர்பில் செய்திக் குறிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

குறித்த செய்திக் குறிப்பில்,

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வேலணை தெற்கு கிராம சேவையாளர் பிரிவு
3/17இல் ஆதன வரி அறவிடல் செயற்பாடுகளை எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் (4ம்
காலாண்டு) ஆரம்பிக்கவுள்ளது.

பொருத்தமான ஆவணங்கள்

இதன்பிரகாரம் குறித்த பிரதேசத்தில் வாழும் காணி உரிமையாளர்கள் தமது காணி
தொடர்பான பொருத்தமான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருப்பதுடன் காணிகளை
துப்புரவு செய்து எல்லைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version