Home சினிமா கூலி பட முதல் காட்சி, தியேட்டருக்கு ஓடோடி சென்ற லோகேஷ், அனிருத்.. வீடியோ வைரல்

கூலி பட முதல் காட்சி, தியேட்டருக்கு ஓடோடி சென்ற லோகேஷ், அனிருத்.. வீடியோ வைரல்

0

கூலி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.

50 ஆண்டுகள் கடந்த ரஜினி.. இதுவரை யாரும் பார்க்காத புகைப்படத்தை பகிர்ந்த கமல்

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வீடியோ வைரல் 

இந்நிலையில், இன்று கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கியது. ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் படத்தை பார்த்து வருகின்றனர்.

கூலி படத்தை பார்க்க இயக்குநர் லோகேஷ், அனிருத், ஆகியோர் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் அவரது மனைவி, சாண்டி மாஸ்டர் என பலர் படத்தை காண சென்றுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version