Home இலங்கை அரசியல் வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை! நாடாளுமன்றில் கடும் கூச்சல் குழப்பம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை! நாடாளுமன்றில் கடும் கூச்சல் குழப்பம்

0

வெலிகம பிரதேச சபையின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

வெலிகம பிரதேச சபையின் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் லசந்த விக்ரமசேகர இன்று காலை துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சபையில் குழப்பம்

இந்தநிலையில்,  குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் அறிவித்த போது சபாநாயகர், நிலையியற் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம்  தற்போது இது குறித்து கதைக்க முடியாது என்று அறிவித்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கடும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். 

இதனால் சில நிமிடங்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பிரதேச சபைத் தலைவர்  மரணமடைந்ததாக தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிய நிலையில் பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பேச தொடங்கிய நிலையில் சில நிமிடங்கள் குழப்பம் ஏற்பட்டது.

NO COMMENTS

Exit mobile version