Home இலங்கை சமூகம் ‘டிட்வா’ பாதிப்பை சீர்செய்ய மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் இலங்கை: வெரிட்டே ரிசேய்ச் எச்சரிக்கை

‘டிட்வா’ பாதிப்பை சீர்செய்ய மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் இலங்கை: வெரிட்டே ரிசேய்ச் எச்சரிக்கை

0

 ‘டிட்வா’பேரிடரில் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்வதற்காக சர்வதேச நாயண நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ள rapid financial instrument என்ற கடன் திட்டம் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பை மீளமைப்பதற்காக மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கு சமனானதாகும் என சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான (Verité Research) வெரிட்டே ரிசேய்ச் தெரிவித்துள்ளது.

அதன் நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் நிசாந்த த மெல் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஏற்படப்போகும் பாதிப்பு

விசேட கொடுக்கல் வாங்கல் என்ற அடிப்படையில் பெற்றுக் கொள்வதால் இந்த கடன் திட்டம் எமக்கு இலாபகரமானதாக இருக்காது.
இந்த நிதி உதவியின் வட்டி விகிதம் எமக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும்.

இந்த நிதி உதவி அமெரிக்கன் டொலரில் பெறப்படுவதால் அதற்கான வட்டி விகிதம் 6 வீதம் என்பதோடு இலங்கை ரூபாவில் 11 வீதமாக கணக்கிடப்படும்.
நீண்ட காலக் கடன் திட்டம் என்பதால் மூன்று வருடத்திற்கு பின்னர் அதன் வட்டி விகிதம் 2.75 வீதத்தால் அதிகரிக்கக் கூடும்.

அவரின் எஸ் தளத்தில் இது தொடர்பில் மிக விரிவாக தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இதற்கு மாற்று வழிகளில் வேறு தீர்வுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வருட மத்திய வங்கி பிணை முறிகள் மூலம் தேசிய வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.அமெரிக்கன் டொலரில் கடன் பெற்றுக் கொள்வதை விட ரூபாவில் பெற்றுக் கொள்வது செலவு குறைந்த வழியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version