Home இலங்கை சமூகம் 8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை

8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை

0

வெசாக்கை முன்னிட்டு நடத்தப்படும் 8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத தன்சல்களை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்தோடு, முறையான அறிவுறுத்தல்களுக்குப் பிறகு மேலும் 17 தன்சல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.

தன்சல்கள் ஏற்பாடு

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் பல தன்சல்கள் (உணவு தானம்) ஏற்பாடு செய்யப்பட்டன.

அனைத்து தன்சல்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்பார்வையிடப்பட்டன.

இந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் கூறுகையில், இன்று நடைபெறும் தன்சல்கள் தொடர்பிலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version