Home ஏனையவை வாழ்க்கைமுறை இலங்கை முழுவதும் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை

இலங்கை முழுவதும் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை

0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கைப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வயிற்றுப்போக்கு அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வெசாக் தினத்தை முன்னிடத்து நடத்தப்படும் தானசாலைகளின் போது சுத்தமான நீரைப் பயன்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


சுகாதார பரிசோதகர்

மழையினால் நீர் நிலைகள் மாசுபடும் அபாயமே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெசாக் போயா தினத்திற்கு முந்திய நாள் வரை ஒவ்வொரு பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்திலும் தன்சல் பதிவுகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறுகிறார்.

ஏனைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு தானசாலைகளுக்கான பதிவில் குறைபாடு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version