தர்மேந்திரா காலமானார்
இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் தர்மேந்திரா, காலமானார். இவருடைய வயது 89.
கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் இருந்து வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஷாருக்கான், சல்மான் கான் என பல முன்னணி நட்சத்திரங்கள் தர்மேந்திராவை சந்திக்க மருத்துவமனைக்கு சென்றனர்.
கடந்த சில மணிநேரங்களுக்கு முன் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளிவந்தது. அந்நேரம் அவர் இறந்துவிட்டதாகவும் சில வதந்திகள் கிளம்பின. ஆனால், தற்போது நடிகர் தர்மேந்திரா இறந்துவிட்டார் என்கிற செய்தி உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளது.
பழம்பெரும் நடிகரான தர்மேந்திராவின் மறைவு பெரும் துயரத்தை திரையுலகினருக்கு கொடுத்துள்ளது. மேலும், ரசிகர்கள் தங்களது அஞ்சலியை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
