வெற்றிமாறன்
இதுவரை தமிழ் சினிமாவில் தோல்வியே காணாத இயக்குநர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். கடைசியாக வெளிவந்த விடுதலை 2 கலவையான விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு படப்பிடிப்பு துவங்கும் என கூறப்பட்டுள்ளது.
ரஜினி அழைத்தும் முத்து ஹீரோயினாக நடிக்க மறுத்த பெப்சி உமா! ஏன் தெரியுமா?
இயக்குநர் வெற்றிமாறன் சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும்போது தனது காதல் மனைவி ஆர்த்தியை சந்தித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், பின் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூந்தென்றல் என்கிற மகளும், கதிரவன் என்கிற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறனின் மனைவி ஆர்த்தியின் 50வது பிறந்தநாளை நேற்று பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். அப்போது வெற்றிமாறன் தனது மனைவி ஆர்த்தி, மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த பிறந்தநாள் விழாவில் விஜய் சேதுபதி, பாடகி சைந்தவி, பாடகர் கார்த்தி, நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
