வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே கண்டிப்பாக வசூல் சாதனை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். அந்த அளவிற்கு அப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கும்.
ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா போல் மேடையில் நடனமாடிய ஷாருக்கான்.. அதுவும் யாருடன் தெரியுமா, வீடியோ இதோ
ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் இதற்கு முன் ஜெய் பீம் எனும் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன் பல ஆண்டுகளுக்கு பின் நடித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், ராணா, அபிராமி, ரோகினி, ரக்ஷன் என பலரும் நடித்துள்ளனர்.
அட்வான்ஸ் புக்கிங்
பெரிதும் எதிர்பார்ப்பில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளிவரவிருக்கும் வேட்டையன் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கிவிட்டது. இந்த நிலையில் இதுவரை அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் வேட்டையன் படம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.