Home சினிமா ரஜினியின் வேட்டையன் படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்… கணிக்கப்பட்ட விவரம்

ரஜினியின் வேட்டையன் படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்… கணிக்கப்பட்ட விவரம்

0

வேட்டையன்

சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் வேட்டையன்.

அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அபிராமி, ரித்திகா சிங், ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்பெஷல் காட்சிகள் இல்லை, காலை 10 மணி முதல் காட்சி டிக்கெட் புக்கிங் நடைபெற்றிருக்கிறது.

முதல்நாள் வசூல்

வேட்டையன் படம் ரிலீஸ் ஆக இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் அமெரிக்காவில் படத்தின் ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரூ. 40 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் இந்தியாவில் இதுவரை ரூ. 8 கோடி வரை வசூல் வேட்டையை நடத்தியிருக்கிறதாம்.

எனவே ப்ரீ புக்கிங் வசூலை வைத்து பார்க்கையில் படம் முதல் நாளில் அதிகபட்சமாக ரூ. 70 முதல் ரூ. 80 கோடி வரையிலான வசூல் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/vettaiyan-movie-first-day-bo-prediction-1728367825

NO COMMENTS

Exit mobile version