வேட்டையன்
நடிகர் ரஜினி, ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடித்துவரும் படம் வேட்டையன்.
ஜெய் பீம் என்ற சிறந்த படத்தை கொடுத்த ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் தான் வேட்டையன். லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.
படமும் வரும் அக்டோபர் 10ம் தேதி மாஸாக வெளியாக இருக்கிறது.
வைரல் போட்டோ
வேட்டையன் படத்தில் ரஜினியை தாண்டி அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில் என பலர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.
148 நாட்கள் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்துவிட்டது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என தகவல்கள் வருகின்றன.
தற்போது படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பின் போது படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.
Source: https://cineulagam.com/article/vettaiyan-movie-shooting-spot-photos-viral-1724850154
