Home சினிமா விஜய் ஆண்டனிக்கு உள்ள வித்தியாசமான பழக்கம்.. அவரே கொடுத்த தகவல்

விஜய் ஆண்டனிக்கு உள்ள வித்தியாசமான பழக்கம்.. அவரே கொடுத்த தகவல்

0

விஜய் ஆண்டனி

இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. சுக்கிரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வந்த விஜய் ஆண்டனி, ‘நான்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின், சலீம், பிச்சைக்காரன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார்.

தற்போது இவர் அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன் உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் மார்கன் படத்தில் நடித்துள்ளார்.

சுற்றி வளைத்த போலீஸ், மகள் ஜோவிகா செய்த விஷயம்.. வனிதா உடைத்த ரகசியம்

வித்தியாசமான பழக்கம்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் செருப்பு அணியாமல் இருப்பது ஏன் என்பது குறித்து விஜய் ஆண்டனி பகிர்ந்துள்ளார்.

அதில், ” செருப்பு கழற்றி வெறும் காலுடன் நடக்கும்போது மனது நிறைவாக இருக்கிறது. இந்த பூமிக்கும் நமக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு பிரபலம் என்பதால் விமான பயணம், ஏ.சி. காற்றில் உறக்கம், பங்களா வீடு என ஆடம்பரம் நம்முடனேயே ஒட்டிவிடுகிறது.

ஆசைப்பட்டாலும் அதை விட முடியாது. எனவே இது போன்று செருப்பு அணியாமல் என்னை ஈடுபடுத்தி என் மனதை பக்குவப்படுத்தி கொள்கிறேன்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.       

NO COMMENTS

Exit mobile version