அரச காணிகளை குத்தகையின் அடிப்படையில் தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பராமரிப்பின்றி காணப்படும் அரச காணிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது இன்று (11/07/2025) திருகோணமலை (Trincomalee) பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கன்னியா பகுதியில் நடைபெற்றது.
கன்னியா பீலியடி எனும் பகுதியில் பலவருட காலமாக வாழ்க்கையை நடத்தி வரும்
நடுத்தர வருமானமுடைய பலர் தமக்கான சொந்தக் காணிகள் இன்றி அங்கு பல வருட காலமாக
வாழ்ந்து வரும் நிலையில் குறித்த பகுதியில் உள்ள அரச காணிகள் பரவலாக
குத்தகையின் அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.
அதிகாரிகளும் துணை
உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து பின்னர் மீழவும் தாம் குடியேறி
அங்கு வாழ்ந்துவருகின்ற போதிலும் தமக்கான காணிகள் இன்னமும் வழங்கப்படவில்லை.
மேலும் சிறு வீடுகளில் திருமணமான பல குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் தாம் குடியிருக்கும் பகுதியில் காணிகளை கோரினாலும் அரசு தமக்கு வழங்க மறுப்பதாகவும் வேறேனும் வசதி படைத்த தனி நபர்கள் குறித்த காணிகளை குத்தகை என்னும் போர்வையில் கையகப்படுத்த படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் அதற்கு அரச கட்டமைப்பிலுள்ள அதிகாரிகளும் துணை போவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டினர்.
