Home சினிமா விஜய் ஆண்டனியின் மார்கன் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

விஜய் ஆண்டனியின் மார்கன் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

மார்கன்

க்ரைம் திரில்லர் கதைக்களத்திற்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் தனி எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருக்கும். ராட்சசன், யுத்தம் செய்தி, துருவங்கள் பதினாறு, டைரி, போர் தொழில், லெவன் ஆகிய திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அந்த வரிசையில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் மார்கன். அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கணவருடன் ரொமான்ஸ்.. மாலத்தீவில் காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால் எடுத்த அழகிய புகைப்படங்கள்..

ஹீரோவாக விஜய் ஆண்டனி நடிக்க அவருடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, ப்ரகிடா, தீப்ஷிகா என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் மார்கன் திரைப்படம் மூன்று நாட்களை தற்போது பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது.

வசூல் விவரம்

இந்த நிலையில், மூன்று நாட்களில் உலகளவில் விஜய் ஆண்டனியின் மார்கன் படம் ரூ. 4.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version