Home சினிமா சாய் அபயங்கரை ஏன் இசையமைக்க அழைக்கின்றனர்?.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்

சாய் அபயங்கரை ஏன் இசையமைக்க அழைக்கின்றனர்?.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்

0

விஜய் ஆண்டனி

இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. சுக்கிரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வந்த விஜய் ஆண்டனி, ‘நான்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின், சலீம், பிச்சைக்காரன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார்.

கடைசியாக இவர் பல படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் மார்கன் படத்தில் நடித்துள்ளார்.

கூலி படத்தில் ஸ்ருதி ஹாசன் ரோல் இதுதான்.. அவரே உடைத்த ரகசியம்

ஓபன் டாக் 

இந்நிலையில், விஜய் ஆண்டனி பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது 25 – வது படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா நடந்தது.

அந்த விழாவில், தமிழ் திரை உலகில் புதியவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவது குறித்து விஜய் ஆண்டனி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” சாய் அபயங்கர் திறமையோடு வந்திருக்கிறார். அதனால் எல்லோரும் அவரை இசையமைக்க அழைக்கின்றனர். சாம் சி.எஸ்., சாய் அபயங்கர் இருவருமே திறமையானவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

    

NO COMMENTS

Exit mobile version