Home சினிமா தயங்கி தயங்கி கேட்ட விஜய் தேவரகொண்டா.. சூர்யா உடனே செய்த உதவி

தயங்கி தயங்கி கேட்ட விஜய் தேவரகொண்டா.. சூர்யா உடனே செய்த உதவி

0

நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது கிங்டம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் வரும் ஜூலை 31ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

சென்னையில் நடந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா நடிகர் சூர்யாவுக்கு நன்றி கூறி இருக்கிறார்.

சூர்யா செய்த உதவி

இந்த படத்தின் கதை ஆந்திரா, சென்னை, இலங்கை கடற்கரை பகுதிகளில் நடப்பது போல தான் இருக்கிறது. கதை கேட்கும்போதே இதை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் செய்ய வேண்டும் என சொன்னேன்.

கிங்டம் பட டீசரில் குரல் கொடுக்க சூர்யா சரியாக இருப்பார் என இயக்குனர் கூறினார். அதை அவரிடம் தயங்கி தயங்கி கேட்டேன்.

“அண்ணா எனக்கு ஒரு உதவி..” என தயங்கியபடி டீசருக்கு குரல் கொடுக்க வேண்டும் என கேட்டாராம். அதற்கு சூர்யா உடனே ஓகே சொல்லிவிட்டாராம். அதனால் அவருக்கு பெரிய நன்றி என விஜய் தேவரகொண்டா மேடையிலேயே கூறி இருக்கிறார்.  

NO COMMENTS

Exit mobile version