Home சினிமா அஜித்தை இயக்கும் விஜய்.. உருவாகும் புதிய படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..

அஜித்தை இயக்கும் விஜய்.. உருவாகும் புதிய படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..

0

இந்த ஆண்டு குட் பேட் அக்லி என்கிற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்த அஜித் தற்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். அடுத்து அவர் நடிக்கவிருக்கும் AK 64 திரைப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. 2026 பிப்ரவரி மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார் ரேஸ்

சினிமாவை தாண்டி அஜித் கார் ரேஸில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார். சமீபத்தில் 2025ஆம் ஆண்டுக்கான ஜென்டில்மேன் டிரைவர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டது.

இது மிகப்பெரிய கௌரவம் ஆகும்.

தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கார் ரேஸில் பங்கேற்று வரும் அஜித், தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவந்துள்ள திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

ஆவணப்படம்

இந்த நிலையில், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், அஜித்தின் கார் ரேஸ் பயணம் ஆவணப்படமாக உருவாகிறது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்குகிறார்.

இந்த ஆவணப்படம் விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அஜித் கிரீடம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version