நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதல் மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார். அதில் ரசிகர்கள் பல லட்சம் பேர் கலந்துகொண்டனர்.
அந்த மாநாட்டில் விஜய் ஆவேசமாக பேசி இருந்த நிலையில், திமுக ஆதரவாளரான நடிகர் போஸ் வெங்கட் ட்விட்டரில் போட்ட பதிவு விஜய் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
“யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு” என விஜய் மேடையில் பேசியதை அவர் விமர்சித்து இருந்தார்.
விஜய் ரசிகர்கள் முறைக்குறாங்க..
இந்நிலையில் சமீபத்தில் சினிஉலகத்திற்கு போஸ் வெங்கட் அளித்த பேட்டியில் “நான் ரோட்டில் சென்றால் சின்ன பையன் கூட முறைச்சிட்டு போறான். அவன் விஜய் fan தான் என எனக்கு அப்போது தெரியும்.”
“நான் ஹோட்டல் போன போது ஒருவர் பயங்கரமாக ரியாக்ட் செய்தார், நீங்க என்ன விஜய் fan-ஆ என கேட்டேன், சிரித்தார்.”
“அரசியல் என்பது வேறு, உங்களை போல நானும் விஜய்க்கு ரசிகன் தான். முதல் நாள் அவர் படம் பார்ப்பேன். நான் அரசியல் களத்தில் தான் அவரை எதிர்த்து பேசினேன்” என போஸ் வெங்கட் கூறி இருக்கிறார்.