Home சினிமா விஜய்யின் கோட் படம் 18 நாள் முடிவில் செய்துள்ள மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

விஜய்யின் கோட் படம் 18 நாள் முடிவில் செய்துள்ள மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

0

விஜய்யின் கோட்

விஜய்யின் கோட் படம் அவரது திரைப்பயணத்தில் கடைசி படத்திற்கு முந்தைய படமாக அமைந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் என ஏராளமான நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அதிலும் யுவன் ஷங்கர் ராஜா இசை இப்படத்திற்கு பெரிய பலம் என்றே கூறலாம். கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் முதல் நாள் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 126 கோடி வரை வசூல் செய்திருந்தது.

ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனமும் படத்தின் வசூல் வேட்டை குறித்து அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.

முழு வசூல்

விஜய்யின் கோட் படம் ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில் தற்போது 18 நாள் முடிவில் படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் கோட் படம் 18 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 420 கோடி வரை வசூலித்துள்ளதாம். 

Source: https://cineulagam.com/article/vijay-goat-movie-box-office-details-1727060576

NO COMMENTS

Exit mobile version