ஜனநாயகன்
வருகிற 2026 தமிழ் சினிமாவில் கொண்டாட்டத்துடன் ஆரம்பம் ஆகிறது. காரணம் தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இது விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் சமீபத்தில் வெளிவரும் ரிப்போர்ட்களில் படம் சிறப்பாக வந்துள்ளது என கூறுகின்றனர்.
சிறை திரைவிமர்சனம்
முன்பதிவு வசூல்
கடந்த சில நாட்களுக்கு முன்பே ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு வெளிநாட்டில் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், இதுவரை நடந்துள்ள முன்பதிவில் இப்படம் ரூ. 5.7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
