Home சினிமா விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா செய்யும் வசூல் சாதனை… இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா செய்யும் வசூல் சாதனை… இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

0

மகாராஜா

நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி அண்மையில் வெளியான திரைப்படம் மகாராஜா.

இந்த படம் ஒரு எளிய முடிதிருத்துபவரின் கதையையும் அவரது குழந்தை மீதான அவரது அன்பையும் சொல்கிறது.

குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இந்த படம் மூலமாகவும் மக்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

விஜய் சேதுபதியை தொடர்ந்து மம்தா மோகன்தாஸ், நட்டி, பாரதிராஜா, சிங்கம்புலி, அபிராமி, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பட வசூல்

ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் வசூல் வேட்டையும் செய்து வருகிறது.

கடந்த ஜுன் 14ம் தேதி வெளியான இப்படம் 5 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 45 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.

வரும் நாட்களிலும் படத்தின் கதைக்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளதால் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/vijay-sethupathi-maharaja-movie-box-office-details-1718768407

NO COMMENTS

Exit mobile version