Home இந்தியா இந்தியாவில் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த அவலம்!

இந்தியாவில் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த அவலம்!

0

இந்தியாவில் (India) கேரளா (Kerala) மாநிலத்தில் தொலைக்காட்சி விழுந்ததில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு (24) 9.30 மணியளவில் கொச்சின் துறைமுக நகருக்கு அருகில் உள்ள மூவாட்டுப்புழாவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில், குறித்த பகுதியில் வசித்து வரும் அனாஸ் (Anas) என்பவரின் மகனான அப்துல் சமத் என்ற ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

உயிரிழப்பு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  ஒன்றரை வயது குழந்தை மீது நேற்றிரவு தொலைக்காட்சியானது அதன் மேசையுடன் விழுந்துள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மேலும்,தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்த மேசையை குழந்தை தொட்டதால் மேலே விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version