Home இந்தியா மோடி அரசுக்கு நெருக்கடியான தொடர் போராட்டம்: பதவி விலகலுக்கு கோரப்பட்ட கால அவகாசம்

மோடி அரசுக்கு நெருக்கடியான தொடர் போராட்டம்: பதவி விலகலுக்கு கோரப்பட்ட கால அவகாசம்

0

இந்தியாவின் நீட் (NEET) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்களின் முக்கிய கோரிக்கையில் முடிவெடுக்க, சனிக்கிழமை ( 25.07.2026) பிற்பகல் வரை மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) தெரிவித்துள்ளது.

அரசுப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய CJP-இன் தேசிய செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா,’நீட் தேர்வு விவகாரத்தில் அமைப்பு ரீதியான பொறுப்புக்கூறல் அவசியம் என தங்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் கூறியுள்ளார். 

தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை தொடர்பாக, நாளை பிற்பகல் வரை அரசு அவகாசம் கோரியுள்ளது என்றும் இந்திய ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார். 

பிரதான் பதவி விலகல் கோரிக்கை

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர் 

‘தர்மேந்திர பிரதானை விரைவில் பதவியிலிருந்து நீக்கும் என நம்புகிறோம்,

இதற்கிடையில், மாணவர் அமைப்புகள் மற்றும் போராட்டக்காரர்கள் முன்வைத்த பிற முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட  மாணவர்களின் குடும்பங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குவது மற்றும் போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் (FIR) மற்றும் சட்ட வழக்குகளை முழுமையாகத் திரும்பப் பெறுவது ஆகிய இரு கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது. 

உயிரைமாய்த்துக்கொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகள், சட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது ஆகிய இரண்டு கோரிக்கைகளுக்கும் அரசு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

தேர்வு முறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், போராட்டங்களில் பங்கேற்ற மாணவர் ஆர்வலர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும் என்ற அரசின் உறுதிமொழி விரைவில் நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கையையும் சி.ஜே.பி வெளிப்படுத்தியுள்ளது.

Source: https://ibctamil.com/article/dharmendra-pradhan-resignation-demand-1784886973

NO COMMENTS

Exit mobile version