Home சினிமா உயிருக்கு போராடிய சைப் அலி கான்.. ஆட்டோ டிரைவருக்கு தரப்பட்ட வெகுமதி இவ்வளவா

உயிருக்கு போராடிய சைப் அலி கான்.. ஆட்டோ டிரைவருக்கு தரப்பட்ட வெகுமதி இவ்வளவா

0

ஹிந்தி நடிகர் சைப் அலி கான் கடந்த வாரம் அவரது வீட்டில் புகுந்த திருடனால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரே ஆட்டோவில் ஏறி தனது குழந்தை உடன் ஹாஸ்பிடலுக்கு சென்று அட்மிட் ஆனார்.

அவருக்கு ஆபரேஷன் செய்த மருத்துவர்கள் அவரது முத்துத்தண்டு அருகில் குத்தப்பட்ட கத்தியின் உடைந்த பாகத்தை எடுத்தனர். தற்போது சைப் அலி கான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு திரும்பி இருக்கிறார்.

ஆட்டோ டிரைவரூக்கு பணம்

சைப் அலி கானை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆட்டோ டிரைவருக்கு தற்போது 11 ஆயிரம் ரூபாய் வெகுமதியாக தரப்பட்டு இருக்கிறதாம்.

அதை அவரே தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். போலீசார் விசாரணையில் ஆட்டோ டிரைவரையும் வரவைத்து அவரது வாக்குமூலத்தை ஏற்கனவே பெற்றது குறிப்பிடத்தக்கது.  

நடிகர் டிஸ்சார்ஜ் ஆன பிறகு தனது ரசிகர்களுக்கு கையசைத்து இருக்கும் வீடியோ இதோ.

NO COMMENTS

Exit mobile version