Home சினிமா துபாய்ல Part Time Job செய்தேன்.. வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி

துபாய்ல Part Time Job செய்தேன்.. வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி

0

விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்தது திரைப்படம் ஏஸ். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

நடிகர் விஜய் சேதுபதி சினிமாவிற்கு வருவதற்கு முன் துபாயில் வேலை பார்த்து வந்தார் என்பதை நாம் அறிவோம். அதை அவரே பல இடங்களில் கூறியுள்ளார். இந்த நிலையில், துபாய்ல வேலைபார்த்து வந்தபோது Part Time Job கூட அவர் செய்துள்ளார். அதுகுறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஜனநாயகன் படம் குறித்து விஜய் எடுத்த அதிர்ச்சி முடிவு.. கடும் வருத்தத்தில் ரசிகர்கள்

விஜய் சேதுபதி பேச்சு

“துபாய்ல இருக்கும்போது Part Time Job செஞ்சிருக்கேன். இன்னொரு வேலை செய்வதற்கு அங்கு அனுமதி கிடையாது. ஆனால் ஃப்ரீ விளம்பர பேப்பர் போடுவதற்கு மட்டும் விடுவாங்க.

எனக்கு சம்பளம் பத்தல என்பதற்காக இன்னொரு வேலை தேடிட்டு இருந்தேன். அப்போதான் பேப்பர் போடுற வேலை எனக்கு கிடைத்தது.

நான் ஏற்கனவே 1000 திராம் வாங்கிட்டு இருந்தேன்.

பேப்பர் போடுவதற்கு 500 திராம் கொடுத்தாங்க. வியாழக்கிழமைகளில் விடியற்காலை பேப்பர் போடணும். துபாய் ஷேக் ரோட்ல 3000 பேப்பர் போட்டு இருக்கேன். இதெல்லாம் நான் கஷ்டப்பட்டேன்னு சொல்லல. இன்னும் 500 தராம் எக்ஸ்ட்ரா சம்பாதிக்கிறோம் என்று ஜாலியா தான் இருக்கும்” என அவர் கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version