கில்லி
விஜய் – தரணி கூட்டணியில் உருவாகி கடந்த 2004ஆம் வெளிவந்த திரைப்படம் தான் கில்லி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.
அருண் விஜய் அக்கா திருமணத்தில் நடிகர் விஜய்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
இப்படத்தை 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் கடந்த வாரம் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற கில்லி ரீ-ரிலீஸ் வசூலில் சாதனைகளை படைத்து வருகிறது.
முதலில் நடிக்கவிருந்த ஜோடி
இந்த நிலையில், கில்லி திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோ – ஹீரோயினாக நடிக்கவிருந்தது விஜய் – திரிஷா கிடையாதாம். விஜய்யின் வேலு கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் விக்ரம் தான் நடிக்கவிருந்தாராம்.
அதே போல் திரிஷா நடித்த தனலட்சுமி கதாபாத்திரத்தில் முதன் முதலில் இயக்குனர் தரணி தேர்வு செய்தது நடிகை ஜோதிகாவை தானாம். ஆனால், சில காரணங்களால் இருவரும் இப்படத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் பதிலாக இப்படத்தில் ஹீரோவாக விஜய்யும், ஹீரோயினாக திரிஷாவும் கமிட்டாகி நடித்து படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.