Home இலங்கை சமூகம் இலங்கை அபிவிருத்தி அடைந்து வந்தாலும் மாற்றுத்திறனாளிகள் அச்சத்திலேயே வாழ்கின்றனர்: விஜயகுமார் விஜயலாதன்

இலங்கை அபிவிருத்தி அடைந்து வந்தாலும் மாற்றுத்திறனாளிகள் அச்சத்திலேயே வாழ்கின்றனர்: விஜயகுமார் விஜயலாதன்

0

இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகள்
இப்போதும் தமது தேவைகளை நிறைவேற்றுவதில் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக  புதிய வாழ்வு இல்லத்தின் இணைப்பாளர் விஜயகுமார் விஜயலாதன்
தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர்
மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

  “எங்களை பொறுத்த வரையில் சமூகத்தின் மத்தியில் ஒரு மாற்றுத்திறனாளி தன்னுடைய
அன்றாட தேவைகளை குடும்பத்திலிருந்து பொது
இடங்களிலும் மருத்துவம் மற்றும் கல்வி வேலை வாய்ப்புகள் போன்ற எல்லா
விடயங்களிலும் பல்வேறுபட்ட அணுகும் வசதிகள் இல்லாமல் சிரமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எங்கள் நாடு வளர்ச்சி அடைந்து வருகின்ற ஒரு நாடாக
இருந்தாலும் சேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாக
இருக்கின்றது. 

அதற்கான நிறுவனங்கள் அதனை நிவர்த்தி செய்து வந்தாலும் முழுமையாக
எல்லாரையும் இந்த சேவைகள் பூர்த்தி செய்யப்படுவதில்லை.

எனவே மாற்றுத்திறனாளிகள் பலர் அச்சத்தோடும் அனைத்து துறைகளிலும் பூர்த்தி செய்ய முடியாத வசதி வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் தான் எங்களை பொறுத்தவரையில் இருந்து வருகின்றார்கள். 

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளை மகிழ்வானர்களாக வைத்திருக்கும் களமாக புதிய வாழ்வு
நிறுவனமும் சாவிகா சங்கீத அறிவாலயம் அமைப்பும் இணைந்து வடக்கின் மாற்று
திறனாளிகளுக்கான இசைப்போட்டியை எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் மங்கயற்கரசி
வித்தியாலயத்தில் முற்பகல் 09.00 மணியில் இருந்து நடாத்த உள்ளது.

ஆகவே, இதற்கு மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version