ஐஸ் போதைப்பொருளுடன் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி கிராம உத்தியோகத்தர் கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் மீரிகம பொலிஸாரால்
நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மீரிகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட
சுற்றிவளைப்பில் சந்தேகநபரான கிராம உத்தியோகத்தர் மீரிகம – ஹலுகம பகுதியில்
வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
இவர் மீரிகம – நெலிகம பகுதி கிராம உத்தியோகத்தர் ஆவார்.
அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மீரிகம பொலிஸார், அவரை
நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
