Home இலங்கை சமூகம் பெண்ணை மிரட்டி நகை கொள்ளை: அதிரடி காட்டிய கிராம மக்கள்

பெண்ணை மிரட்டி நகை கொள்ளை: அதிரடி காட்டிய கிராம மக்கள்

0

மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (15) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – முள்ளியவளை, பொன்னகர் கிராமத்தில் உள்ள வளர்மதி மைதானத்திற்கு அருகாமை இரவு 7 மணியளவில் வீதியால் பயணித்தபோது இனந்தெரியாத கொள்ளையர்கள் இருவர் குறித்த பெண்னை வழிமறித்து கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுண் தங்க சங்கலியை நேற்றையதினம் இரவு பறித்து கொண்டு தப்பி சென்றிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக கிராம மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் இணைந்து கொள்ளையர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து முள்ளியவளை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது, 32, 22 வயதுடைய, தர்மபுரம் விசுவமடு பகுதியினை சேர்ந்த இரு சந்தேகநபர்களே செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை இம் மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக முள்ளியவளை காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/MUP0V8jKn5s

NO COMMENTS

Exit mobile version