Home இலங்கை சமூகம் இனவாதத்தை கட்டவிழ்த்துவிடும் விமல் வீரவன்ச: தமிழர் தரப்பு கண்டனம்

இனவாதத்தை கட்டவிழ்த்துவிடும் விமல் வீரவன்ச: தமிழர் தரப்பு கண்டனம்

0

 முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச
ஊடகங்களில் தொடர்ச்சியாக இனவாதத்தை கட்டவிழ்த்து பொய்யான சித்தரிப்பை சிங்கள
மக்கள் மத்தியில் ஏற்படுத்த முனைகின்றார் என வடக்கு மாகாணசபை முன்னாள்
உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்யைில், “1956 ஆண்டில் இருந்து 2009 ஆண்டுவரை தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத
ஆட்சியாளர்களும் அவர்களது குண்டர்களும் இராணுவமும் இணைந்து மேற் கொண்ட இரத்தக்
களரியையும் இனப்படுகொலையையும் மறைத்து செம்மணி அகழ்வின் மூலம் தமிழர்கள்
மீண்டும் இரத்தக் களரியை ஏற்படுத்த முனைகிறார்களா?

என பொய்யான பித்தலாட்ட இனவாதத்தை தூண்டுகின்றார்.

மனிதப் புதைகுழி 

செம்மணி மனிதப் புதைகுழியை அகழ்வதால் என்ன பயன் என கேள்வி கேட்பதற்கு விமல்
வீரவன்சவிற்கு அருகதை கிடையாது.

காரணம் கடந்தகால செம்மணி மனிதப் புதைகுழி
விவகாரத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களில் விமல் வீரவன்சவும்
முக்கியமானவர்.

சந்திரிக்கா அரசுடன் ஆட்சியில் ஒன்றாக இருந்த 39 ஜெனத்தா விமுக்தி பெரமுனவின்
நாடாளுமன்ற உறுப்பினர்களில் விமலும் ஒருவர்.

புதைகுழியில் இராணுவம் 

செம்மணி புதைகுழியில் இராணுவம் மற்றும் சிங்கள, முஸ்லீம் மக்களின் எலும்புக்
கூடுகளாக இருக்கலாம் என்ற வீரவன்சவின் கூற்று இனங்களிடையே முறுகல் நிலையை
ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேட முனைவதுடன் இராணுவ சாட்சியங்களுடன் உள்ள
விவகாரத்தில் உண்மைகள் வெளிவந்து விடக் கூடாது அதனை திசை திருப்பி நீர்த்துப்
போகச் செய்வதில் வீரவன்ச போன்ற இனவாதிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இனவாதத்தை தலைதூக்க விடமாட்டேன் என பேச்சளவில் கூறிவரும் ஐனாதிபதி அநுர
தன்னுடைய பழைய முகாமின் சக தோழர் விமல் வீரவன்சவின் இனவாத்திற்கு என்ன செய்யப்
போகிறார்” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version