Home இலங்கை குற்றம் தேர்தல் சட்டத்தை மீறிய28 வேட்பாளர்கள் கைது!

தேர்தல் சட்டத்தை மீறிய28 வேட்பாளர்கள் கைது!

0

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய
ஏனைய குற்றங்கள் தொடர்பில் 28 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று
பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 330 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் பொலிஸ்
ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முறைப்பாடு

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 259 முறைப்பாடுகளும்,
தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 71 முறைப்பாடுகளும்
கிடைத்துள்ளன.

இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய
குற்றங்கள் தொடர்பில் 28 வேட்பாளர்களும், 111 சந்தேகநபர்களும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காகச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட 26 வாகனங்களும்
பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும்
தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version