Home இலங்கை குற்றம் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தொடரும் வன்முறைச் சம்பவங்கள்

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தொடரும் வன்முறைச் சம்பவங்கள்

0

யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் வாள்வெட்டு சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டிற்கு இலக்கானவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை
பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாய்த்தர்க்கம்.. 

மாமன் மற்றும் மருமகனுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக
மாறியுள்ளதுடன், மாமன் மருமகன் மீது வாளால் வெட்டியதில்
மருமகன் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயத்திற்கு உள்ளானவர் வடமராட்சி துன்னாலையை வேம்படி பகுதியை சேர்ந்த 31
வயதுடைய சிவகுமார் நிதீஸ்குமார் ஆவார்.

இதேவேளை சிவகுமார் நிதிஸ்குமாரை
வெட்டிய வரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார
வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றார். 

NO COMMENTS

Exit mobile version