Home இலங்கை சமூகம் யாழில் இரு வீடுகள் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்: மூவர் கைது

யாழில் இரு வீடுகள் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்: மூவர் கைது

0

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த தாக்குதல் நேற்று(02) நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்: பதில் வழங்கிய இந்தியா

மேலதிக விசாரணை

பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிபர் தேர்தலை தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

NO COMMENTS

Exit mobile version