Courtesy: Harrish
முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காக காணி சுவீகரிப்பு செய்வதற்கான அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவீட்டு பணிகள் எதிர்வரும் மே மாதம் 02ஆம் ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி
அளவீட்டு பணிகள்
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் அளம்பில் தெற்கு கிராமத்தில் 2.0234 ஹெக்டயர் அளவு
கொண்ட இலங்கை இராணுவத்தின் 24 ஆவது சிங்க றெஜிமன்ட் காணி அமைந்துள்ளது.
குறித்த காணியில் 24 ஆவது சிங்கறெஜிமன்ட் படைத்தலைமையகம் அமைப்பதற்காக
சுவீகரிப்பதற்கான அளவீடு செய்வதற்காக எதிவரும் 02 ஆம் திகதி நில
அளவைத் திணைக்களத்தினர் வருகை தந்து அளவீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் 36 மணித்தியாலங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை