Home இலங்கை இலங்கைக்கு அவுஸ்திரேலியா வழங்கவுள்ள விமானம்

இலங்கைக்கு அவுஸ்திரேலியா வழங்கவுள்ள விமானம்

0

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம்) பிரதிச் செயலாளர் திருமதி மிச்செல் சாங், இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விமானம் ஒன்றை வழங்குவதற்கு தனது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த திருமதி மிட்செல் சாங், அதிபர் ரணிலின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க முன்னிலையில் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு

சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக திருமதி மிட்செல் சாங் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவுஸ்திரேலியாவிற்கு
சட்டவிரோதமாக செல்பவர்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கப்பல் ஒன்றை அந்நாடு இலங்கைக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/a-flight-from-australia-to-sri-lanka-1714225080

NO COMMENTS

Exit mobile version