Home அமெரிக்கா அமெரிக்காவில் வைரஸ் பாதித்த குரங்குகள் தப்பி ஓட்டம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..

அமெரிக்காவில் வைரஸ் பாதித்த குரங்குகள் தப்பி ஓட்டம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..

0

அமெரிக்காவில் மிசிசிப்பி நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் கொவிட்-19 போன்ற வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருந்த குரங்குகள் தப்பி ஓடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் மிசிசிப்பி நெடுஞ்சாலையில் லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் துலேன் பல்கலைக்கழகத்தில் (Tulane University) இருந்த ஆய்வகக் குரங்குகளை ஏற்றிச் சென்ற ட்ரக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

குரங்குகள் தப்பி ஓட்டம்

இந்தக் குரங்குகள் ஹெபடைடிஸ் சி (Hepatitis C) மற்றும் கொவிட்-19 (Covid-19) போன்ற பல வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதால், இவை பொதுமக்களுக்குச் சுகாதார அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஷெரிப் துறையின் சமூக ஊடகப் பதிவில், “இந்தக் குரங்குகள் சுமார் 40 பவுண்டுகள் (சுமார் 18 கிலோ) எடை கொண்டவை. இவை மனிதர்களுக்கு எதிராக ஆக்ரோஷமானவை என்பதால், இவற்றைக் கையாள தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE – Personal Protective Equipment) தேவைப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள், தப்பி ஓடிய இந்தக் குரங்குகளை மக்கள் யாரும் நெருங்க வேண்டாம் என்றும், அவற்றை எங்கு கண்டாலும் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

பொலிஸ்அதிகாரிகள், தப்பி ஓடிய குரங்குகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கு எச்சரிக்கை

“தற்போதுவரை தப்பியோடியுள்ள ஒரு குரங்கைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்கிறது,” என்று ஷெரிப் துறை மேலும் கூறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகின்றது.

ரீசஸ் குரங்குகள் (Rhesus monkeys) பொதுவாக பாலினத்தைப் பொறுத்து 9 முதல் 26 பவுண்டுகள் வரை எடையுள்ளவை. இவை மனிதர்களுடன் மரபணு ரீதியாக ஒத்திருப்பதால், அறிவியல் ஆராய்ச்சியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றின் அதிக இனப்பெருக்க விகிதத்தால் அவற்றின் எண்ணிக்கை நிலையாக உள்ளது.

வரலாற்றுரீதியாக, ரீசஸ் குரங்குகள் மனித அறிவியலை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

குறிப்பாக, 1948-இல் அமெரிக்காவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் குரங்கு ஆல்பர்ட் II (Albert II) ஆகும். மேலும், மனித இரத்தக் குழு (Human Blood Group) வகைப்பாட்டைக் கண்டறிவதில் ரீசஸ் பிறபொருளெதிரிகள் (Rhesus antigens) முக்கியப் பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version