Courtesy: Sivaa Mayuri
இலங்கையில் பன்றிகள் மத்தியில் Porcine Reproductive and Respiratory Syndrome (PRRS) என அறியப்பட்ட நோய் தொற்றானது தற்போது வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முன்னதாக “ஆப்பிரிக்க பன்றி” நோய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள வழங்கியுள்ள தகவலுக்கு அமைய,
கால்நடை உற்பத்தி திணைக்களம்
“ஆரம்பத்தில் காட்டுப்பன்றிகளை தாக்கிய இந்த நோய் தற்போது பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து தொற்றுநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலைமையின் நடவடிக்கையாக நாட்டிலுள்ள சகல பிரதேச செயலகங்களுக்கு இடைப்பட்ட பிரதேசங்களுக்கு பன்றிகளை கொண்டு செல்வதை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.
மருத்துவச் சான்றிதழ்
அத்துடன் பன்றிகளை ஏற்றிச் செல்வதற்கு கால்நடை மருத்துவச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பன்றி இறைச்சியை உணவாக எடுத்துக்கொள்வோருக்கும் சுகாதாரத்துறை எச்சரிக்கையை விடுத்துள்ளது.