Home சினிமா தனக்கு சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குநருடன் மீண்டும் இணையும் விஷால்.. அதிரடியான கூட்டணி

தனக்கு சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குநருடன் மீண்டும் இணையும் விஷால்.. அதிரடியான கூட்டணி

0

விஷால்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மதகஜராஜா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் உச்ச நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

இதை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்கி நடிக்கப்போகிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால், அதன்பின் அப்டேட் எதுவும் வெளிவரவில்லை.

அடுத்த படம்

இந்த நிலையில், விஷாலின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் தான் விஷால் நடிக்கப்போகிறாராம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என கூறுகின்றனர்.

இதற்கு முன் விஷால் – பி.எஸ். மித்ரன் இருவரும் இணைந்து இரும்புத்திரை எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று தனது திருமணம் குறித்து அறிவிப்பை நடிகர் விஷால் வெளியிட்டார். நடிகை சாய் தன்ஷிகாவை காதலித்து வந்த விஷால், வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக கூறினார். ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை இந்த ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

NO COMMENTS

Exit mobile version