விஷ்ணு விஷால்
வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்கள் மூலம் பெரிய வெற்றியை கண்டவர் விஷ்ணு விஷால்.
இவர் கடைசியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான படங்களில் விஷ்ணு விஷாலின் ஆர்யன் படம் வெளியானது.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் படம் வெளியானது.
கலெக்ஷன்
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. எனவே ஒருபக்கம் கலெக்ஷனும் நன்றாக வந்துள்ளது.
5 நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 5.9 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது.
