Home இலங்கை சமூகம் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

0

Courtesy: Ligarin

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe)கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயமானது நேற்று(23.06.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், பீடாதிபதிகள் மற்றும் துறைசார்வல்லுனர்களையும் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் துணைவேந்தர், துறைசார் வல்லுனர்களையும்
சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

ஏற்றுமதி சார்ந்த ஆலோசனைகள் 

இந்த கலந்துரையாடலில் நாட்டின் முன்னேற்றத்திற்கு கிழக்கு பல்கலைக்கழகம் எப்படி பங்காற்ற முடியும் என கலந்துரையாடப்பட்டது.

இதில் முக்கியமாக ஏற்றுமதி சார்ந்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன் ஏற்றுமதி எப்படி நாட்டின் முன்னேற்றதிற்க்கு பாரிய பங்களிப்பு செய்யும் என ஆலோசிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் விவசாயம், கடற்றொழில், சிறுதானியம் மற்றும் சுற்றுலா துறைகளை எப்படி முன்னேற்றுவது தொடர்பான யோசனைகள் மற்றும் திட்டங்கள் கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் துறைசார்வல்லுனர்களினால் மத்திய வங்கி ஆளுனரிடம் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கொண்டுவரப்படவுள்ள கைத்தொழில் பூங்காவினை எப்படி வினைதிறனாகவும் விளைதிறனாகவும் நாட்டின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்துவதற்க்கும் பயன்படுத்துவது குறித்தும் இலங்கையில் நிதி ஸ்த்திரத்தன்மையை எவ்வாறு பேண வேண்டும் என்பது பற்றியும் இக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலானது மத்திய வங்கி திருகோணமலை பிராந்திய அலுவலகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக பொருளாதார வல்லுனர்களின் கூட்டமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version