Home சினிமா தப்பு தப்பா வீடியோ போடுறாங்க, அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு- தொகுப்பாளினி ஜாக்குலின் வருத்தம்

தப்பு தப்பா வீடியோ போடுறாங்க, அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு- தொகுப்பாளினி ஜாக்குலின் வருத்தம்

0

ஜாக்குலின்

விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் பல தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி கலக்கப்போவது யாரு, சில விருது விழா நிகழ்ச்சிகளை மிகவும் ஜாலியாக தொகுத்து வழங்கி தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியவர் தான் ஜாக்குலின்.

தொகுப்பாளினி என்பதை தாண்டி விஜய் டிவி ஒளிபரப்பான தேன்மொழி என்ற தொடரிலும் முக்கிய நாயகியாக நடித்தார்.

பின் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஜாக்குலின் அதன்பிறகு தொலைக்காட்சி பக்கம் அதிகம் வருவது இல்லை.

பிரபலத்தின் வருத்தம்

தொகுப்பாளினி ஜாக்குலின் அண்மையில் தான் சந்திக்கும் மோசமான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.

அவர், என்னை ஒரு லெஸ்பியன் என மோசமாக கமெண்ட் அடித்ததை பார்த்து ரொம்பவே கடுப்பாகி விட்டேன். இது இல்லாமல் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ரக்ஷ்னுடன் தொடர்பு படுத்தி பேசுவது எல்லாம் ரொம்பவே மனதை கஷ்டப்படுத்திவிட்டது.

அஜித்துடன் விஜய் நடிக்க இதை செய்ய வேண்டும்- எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன், என்ன தெரியுமா?

ரக்ஷனுடன் நான் பழகி வந்ததை வைத்து சில மோசமான வீடியோக்கள் எல்லாம் உருவாக்குகிறார்கள். அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் புகழுடன் எல்லாம் சேர்த்து வைத்து பேசுவதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கும்.

ஆனால் ஒருகட்டத்தில் அப்படி பதிவிடும் நபர்களின் கமெண்ட்டுகளை நான் கண்டுகொள்வது இல்லை, இனி இதுபோல என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என காட்டமாக கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version