கடவுச்சொற்கள் அவசர மாற்றம்
சிறிலங்கா அரசாங்க தலைகளும் நிழல் அரசாங்கம் என விளிக்கப்படும் எதிர்கட்சி தலைகளும் மக்களுக்கு நத்தார் வாழ்த்துச் செய்தியை கூறிவிட்டனர்.
இந்த நிலையில் தையிட்டி பகுதியில் புதிய விகாரை உள்ள காணிகள் பொதுமக்களின் காணிகள் என்பதை பௌத்த சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி ஒரு உண்மையை உடைத்துள்ளார்.
இந்த உண்மையை ஆட்சித்தலைகளும் எதிர்க்கட்சிதலைகளும் உள்வாங்கி தமது எதிர்வினைகளை வழங்குவதுதான் உண்மையாக அவர்கள் கூறிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்குரியதாக இருக்கும்
இதற்கிடையே தையிட்டி விகாரையை இடிக்க முன்ன நல்லூர் ஆலயத்தை இடிக்கவேண்டும் கோடையை இடிக்கவேண்டும் முத்திரை சந்தை பகுதியில் உள்ள தேவாலயத்தை அகற்ற வேண்டும் என அலப்பறையாளர்களுக்கும் இது ஒரு செய்தியாகும்.
இதேபோல தெற்கில்
இலங்கையின் ஆழ்கடல் பரப்பில் இயங்கும் போதைப்பொருள் கடத்தல் கப்பல்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய கண்காணிப்பு பொறிமுறை (வெசல் மொனிற்றரிங் சிஸ்ரம் ) போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டதாக பகீரிடும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதனைத்தொடர்ந்து எதிர்வினைகள் வந்துள்ள நிலையில் இந்த விடயங்கைளை மையப்படுத்தி வருகிறது இன்றைய செய்தி வீச்சு…
https://www.youtube.com/embed/DlC2AyTvtvg
