Home இலங்கை சமூகம் ஒல்லாந்தர் காலத்து புராதன கேடயத்துடன் ஹட்டனில் ஒருவர் கைது

ஒல்லாந்தர் காலத்து புராதன கேடயத்துடன் ஹட்டனில் ஒருவர் கைது

0

ஒல்லாந்தர் காலத்து VOC (Dutch East India Company) எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த சந்தேக நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (17.10.2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கினிகத்தேனை (Ginigathhena) பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர், ஹட்டன் (Hatton) பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு 20 இலட்சம் ரூபாவிற்கு VOC கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்துள்ளார்.

இதன்போதே குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொல்பொருள் பெறுமதி

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபருக்கு கேடயம் மற்றும் இரண்டு நாணயங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து சந்தேகநபர் எதுவும் கூறவில்லை எனவும், குறித்த நாணயம் மற்றும் கேடயம் தொடர்பான, தொல்பொருள் பெறுமதியை உறுதிப்படுத்துவதற்காக தொல்பொருள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் தலைமை காவல்துறை பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

VOC என்பது ஒல்லாந்தர் கால “கிழக்கிந்திய கம்பனி” எனும் பெயரைக் குறிக்கும் சுருக்கக் குறியீடாகும். இந் நாணயம் 1732 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள் :- க.கிஷாந்தன்

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24

Source: https://ibctamil.com/article/voc-coins-man-arrested-in-hatton-1729159768

NO COMMENTS

Exit mobile version