ரஷ்யாவின் (Russia) உள்ள சிவேலுச்சு (Shiveluch) எரிமலை வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய அறிவியல் கூடத்ததின் எரிமலைவியல் மற்றும் நிலநடுக்கவியல் கூற்றுப்படி, நேற்று (19) கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே குறித்த எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக, காம்சட்கா தீபகற்பத்தில், வானத்தில் 5 கிமீ உயரத்தில் சாம்பல் மேகம் எழுந்துள்ளதால், தற்காலிகமாக விமானங்களுக்கு சிவப்பு குறியீடு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
புகை மூட்டம்
அந்தவகையில், சிவேலுச்சு எரிமலைக்கு மேலாக பரவிய புகை மூட்டம் 490 கி.மீ (304 மைல்கள்) கிழக்கு மற்றும் தெற்குக் கிழக்குப் பகுதியில் பரவியிருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் வரக்கூடும் என ரஷ்ய அறிவியல் கூடத்ததின் நிலநடுக்கவியல் பிரிவு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.