Home இலங்கை சமூகம் ஜனாதிபதி தேர்தல் : வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு

ஜனாதிபதி தேர்தல் : வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணி இன்றுடன் (14) நிறைவுபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை தபால் திணைக்களம் (Department of Posts) தெரிவித்துள்ளது.

இதுவரை, 84 வீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha K. Ranasinghe) குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டை

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அருகாமையிலுள்ள தபால் அலுவலகங்களில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி தமது வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/voter-card-distribution-complete-today-pres-electi-1726290165

NO COMMENTS

Exit mobile version