பாகிஸ்தானில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கை அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்தை இணைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளதுஃ
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியில் இடம்பெற்றிருந்த அவர், கத்தாரில் இருந்து நேரடியாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்யவுளடளதாக தெரிவிக்கப்படுகிறது.
வனிந்து ஹசரங்க
ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட தொடை தசைப்பிடிப்பு காரணமாக வனிந்து ஹசரங்க இன்னும் முழுமையாக குணமடையாததால், வியாஸ்காந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி முத்தரப்பு தொடரின் முதல் ஆட்டத்தில் நவம்பர் 20 ஆம் திகதி ராவல்பிண்டியில் சிம்பாப்வேக்கு எதிராக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
