இலங்கையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் யாழ்.வீரர்களான விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் குகதாஸ் மாதுளன் ஆகியோர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு, வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சிராஸும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
தம்புள்ளையில் இடம்பெற்று வரும் இன்றைய போட்டியில் இலங்கை “ஏ“ அணி மற்றும் ஆப்கானிஸ்தான் “ஏ“ அணிகள் பலபரீட்சை நடத்துகின்றனர்.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை “ஏ“ அணி முதலில் கலத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி
அதன்படி தற்போது துடுப்பெடுத்தாடிவரும் ஆப்கானிஸ்தான் அணி தற்போது 32 ஓவர் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியில் முதல் விக்கட்டை குகதாஸ் மாதுளன் வீழ்த்தியதோடு, இரண்டாவது விக்கட்டை வியாஸ்காந்த் அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி ஒர வெற்றியுடன் முதல் இடத்திலும், இந்திய அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் இரண்டாம் இடத்திலும், இலங்கை அணி ஒரு தோல்வியுடன் 3 ஆவது இடத்திலும் உள்ளன.
Source: https://ibctamil.com/article/vyaskanth-madhulan-important-cricket-one-day-match-1781333931
