Home இலங்கை சமூகம் வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

0

வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி
பாதயாத்திரை நேற்று(14)ஆரம்பமானது.

வருடாந்தம் நல்லூர் உற்சவ காலத்தில் குறித்த பாதயாத்திரையானது ஆலயத்தின்
தர்மகர்த்தா சாமி அம்மா தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

பாதயாத்திரை

இந்தநிலையில், நேற்று ஆரம்பமான பாதயாத்திரை நல்லூர் கந்தசாமி கோவிலின் தேர்
திருவிழா அன்று நல்லூரை சென்றடையும்.

இதனையடுத்து, நேற்று காலை கோவிலில் விசேட பூஜைகள் இடம் பெற்றதன் பின்னர் பக்தர்கள் புடைசூழ
வவுனியாவில் உள்ள பல்வேறு ஆலயங்களையும் தரிசித்து பாதயாத்திரை ஆரம்பமாகியது.

NO COMMENTS

Exit mobile version