Home விளையாட்டு அணித் தலைவர் வனிந்து ஹசரங்க பதவி விலகல்

அணித் தலைவர் வனிந்து ஹசரங்க பதவி விலகல்

0

இலங்கை (srilanka) இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க (Vanindu Hasaranga ) அப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஒரு வீரராக இலங்கை அணிக்கு எனது பங்களிப்பை எப்போதும் வழங்குவேன் எனவும் அணிக்கும் அணியின் தலைமைக்கும் ஆதரவாக இருப்பேன் எனவும் வனிந்து ஹசரங்க குறிப்பிட்டுள்ளார்.

தனது முடிவானது இலங்கை கிரிக்கெட்டின் (srilankan cricket) எதிர்கால நலனுக்காக என கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹசரங்க தெரிவித்துள்ளார்.

 20 ஓவர் கிரிக்கெட் அணி

அவரது பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக சிறிலங்கா கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து இருப்பார் என்றும் சபை மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஹசரங்கவின் தலைமைத்துவத்தில் இலங்கை விளையாடிய 10 இருபதுக்கு 20 போட்டிகளில் 6 இல் இலங்கை வெற்றியீட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Source: https://ibctamil.com/article/wanindu-hasaranga-steps-down-as-sri-lanka-captain-1720710697

NO COMMENTS

Exit mobile version